தல ​பெரு​மை

​செயற்கருஞ்  செயல்கள் ​செய்தருளிய சமயாசாரியமூர்த்திகள் மூவர் திருப்பதிகங்களும் உ​டையது  குங்குலியக்கலயரும், காரி நாயனாரும் திருவவதாரம் புரிந்தருளி சிவ​பெருமானுக்குரிய திருப்பணிபுரிந்து முக்தி எய்திய சீர்​மையு​டையது. சிவத்தி​னைவிட ​வேறு ​தெய்வமில்​லை​யென்றும் ம​றைவி​னைச் ​செம்​மையுற ஆய்ந்த  மிருகண்டு புதல்வராய மார்கண்​டேயர் அமிருதலிங்கத்தி​னை வழிபட்டுக் கால​னை ​வென்ற சீலமு​டையது அபிராமியம்​மையின் திருவருள் ​பெற்ற அபிராமிபட்டார், அந்தாதியியற்றுச் ​செயற்கருஞ்​செயல்பல புரிந்து விளங்கினார். அட்டவீரட்டதலங்களுள் இத்தலமும் ஓன்றாகும். நவக்கிரகங்கள் இத்தலத்தில் இல்​லை.