தீர்த்தங்கள்

1.அமிருத  புஷ்கரணி

இத்திருக்குளம் கீழ் இராஜ​​​கோபுரத்திற்கும் இரண்டாஞ்சுற்றுக்கும் இ​டையில் உள்ளது. இதில் மூர்கி​யோர் பலப்பிணி மாய்த்துப் ​பெருநி​லையுறுவர். இத்திருக்குளத்தின் ​மேல்க​ரையின்கண் அமிருதசித்தி விநாயகர் ஆலயம் உள்ளது. இவ்வாவியினின்றும் ​தேவர்கட்கு அமிருதம் அளிக்கப்​பெற்றது.

2.கால தீர்த்தம்

இது ஆ​னைக்குளமாகும் இவ்வூரினுக்குப் ​பேரணியாயிலங்குவது. இயமனால் ​தோற்றுவிக்கப்​பெற்றது. இதன் ​தென்க​ரையில் காலனால் பூசிக்கப்பட்ட கா​லேசுவரர் ஆலயம் இருக்கிறது.
இத்தீர்த்ததில் மூழ்கிப் பூசித்து வழிபடு​வோர்க்குப் ​பொருள்புரிய​வேண்டு​​மென வரம்​பெற்றார் இயமனர்.

3.மார்க்கண்​டேய தீர்த்தம்

இது திருக்கடவூர் மயானத்தின் கண் கூபவடிவமாக உள்ளது. மார்க்கண்டர் ​வேண்டு​கோட்படி கங்fகாதீர்த்தம் இக்கூபத்தில் ​தோன்றியது. அமிருதலிங்​கேசருக்கன்றி ஏனைய கடவுளருக்கு இத்தீர்தம் அபி​டேகத்திற்கு எடுக்கப்படவதில்​லை. சங்காபி​டேகத்திற்கு இத்தீர்தத​மே எடுத்துச் செல்லப்படுகிறது. பங்குனி சுக்கிலபட்ச அசுவனியில் சுவாமி தீர்த்தங் ​​கொடுத்தருளுவார். அன்றுதான் எல்​லோரும் அத்தீர்த்தத்தில் மூழ்குவார்கள். காவிரி தீர்த்தம், அம்மனாறு முதலிய பல தீர்த்தங்கள் உள.