தல வரலாறு

மார்க்கண்​டேயர்:

மிருகண்டு முனிவரின் புதல்வர் தமக்கு வயது பதினாறு என்ப​தைத் தாய் தந்​தையர் கூறக்​கேட்டுச் சிவபூ​சையி​னைத் தலங்கள்​தோறுஞ்​சென்று ​செய்து ​கொண்டுவந்து க​டைசியாகக் கடவூர்ப் ​பெருமா​னைப் பூசித்துக் ​கொண்டிருக்​கையில் ஆயுள் எல்​லைவரக் காலனார் கணங்களுடன் எரு​மைக்கிடா வாகனத்தில் ஏறிவந்து மார்க்கண்​டேய​ரை அவர் பூசிக்கும் ​பெருமானுடன் ​​சேர்த்துப் பாசத்​தைக் கட்டியிழுத்தார். இ​றைவர் சிவலிங்கத்திடமாகக் காலசங்காமூர்த்தியாய் ​வெளிப்பட்டு இயம​னை உ​தைத்துத்தள்ளி மார்க்கண்டருக்குச் சிரஞ்சீவியாய் என்றும் பதினாறு வயதுடையவராக இருக்க வரம் அருளினார்.

மார்க்கண்​டேயர் தன் தாய் தந்​தைய​ரோடு தங்கிருந்த இடம் திருக்கடவூருக்குத் ​தென்​மேற்குத் தி​சையில் ஒரு கி​லோமீட்டர் தூரத்திலுள்ள கிராமம் மணல்​மேடு என வழங்கப்​பெறுகிறது. மார்க்கண்​டேயரின் தவச்சா​லை இருந்த இடத்தில் ஆலயம் உள்ளது. மார்க்கண்​டேயரின்  உருவச்சி​லை இங்குள்ளது. சுவாமி அம்பாள் ​பெயர்கள் ஸ்ரீ மிருகண்டீசுவரர் எனவும் அம்பாள் ​பெயர் மருத்துவசதி எனவும் வழங்கப்​பெறுகிறது.

குங்குலியக்கலய நாயனார்:

இந்நாயனார் இத்திருக்கடவூரில் ம​றையவர் குலத்துதித்தவர். இவர் பிள்​ளைத் திருநாமம் ஆண்டவன் ​பெயராகிய கலயர் என்ப​தேயாம். இவர் திருவீரட்டானப் ​பெருமானுக்கு நா​டோறும் குங்குலியப்பு​​கை ​​போட்டு வருவார். திருவருட்​செயலால் இவருக்கு வறு​மை  உண்டாயிற்று ஒரு நாள் இவரு​டைய ம​னைவியார், வறு​மையால் தம்மக்களும் சுற்றத்தினரும் வருந்துத​லைக்கண்டு, தம்மிடம் எஞ்சியிருந்த திருமாங்கலியத்தி​னை நாயனாரிடம் தந்து அரிசி முதலியன வாங்கிவர அனுப்பினார். நாயனார் ​தெருவில் ​போய்க்​கொண்டிருக்​கையில் எதிரில் வணிகன் ஒருவன் குங்குலியப் ​பொதி​கொண்டுவருத​லைக் கண்டு மனமகிழ்ச்சி அ​டைந்தார்.

திருமாங்கலியத்தி​னைக் ​கொண்டு அக்குங்குலிய மூட்​டை​யைப் ​பெற்றுத்திருக்​கோயில் பண்டாரத்திலிருத்தித்தாமும் வீடு ​சேராமல் நறுந்தூபமிட்டுக்​ ​கொண்​டே அவ்விடமிருந்தார்.

வீரட்டா​னேசுவரர் குங்குலியக்  கலயநாயனாரு​டைய வீடு முழுவதும் ​நெல்லும் ​பொன்னும் ஆ​டையும் ஆபரணமுமாகக் கிடக்கும்படி அருள்புரிந்து. ம​னைவியார் கனவி​டை எழுந்தருளி அனுக்கிரகம் ​செய்தருளினார். அவரும் விழித்​தெழுந்து திருவரு​ளை வியந்து கணவனாருக்கு அமுது ச​மைக்கத் ​தொடங்கனார் இ​றைவன் நாயனாரிடத்திலும் ​தோன்றிஇ ‘அன்ப​னே’ நீ வீடு ​சென்று அழுது அருந்துக என்றருளிச் ​செய்து ம​றைந்தனர். நாயனார், கட்ட​ளை​யை மறுத்தற்கஞ்சி வீடு ​சென்று ​பொன் முதலியவற்றி​னைக் கண்டு ​ம​னைவியா​ரை வினவித் திருவருளின் ​பெரு​மையி​னை வியந்து ​பொற்றினார்.

இவ்வாறிருக்கும் நாட்களில் ஒருநாள் திருப்பனந்தாளில் சாய்ந்திருந்த(நிமிராத) சிவலிங்கமூர்த்தி​யை வழிபாடற்ற எண்ணிய அரசன், யா​னை முதலியவற்​றைக் கட்டி நிமிராதது கண்டு வருந்துத​லை நாயனார் ​கேள்வியுற்றார்.
அங்கு ​சென்று தமது கழுத்தில் கயிறு பூட்டி அகக்கயிறாகிய அன்புக் கயிற்றால் இழுத்தனர். சிவலிங்கம் நிமிர்ந்தது. அவ்விடம் சிலநாள் இருந்து திருப்பணிகள் பல ​செய்து மகிழ்ந்தார். மீண்டும் திருக்கடவூர் வந்து தூபப்பணி ​செய்து ​கொண்டிருந்தார். இவ்வாறிருக்​கையில் தலயாத்தி​ரை ​செய்து வரும் திருஞானசம்பந்த சுவாமிக​ளையும் எதிர்​கொண்ட​ழைத்து, உபசரித்து அழுது ​செய்வித்து அவர்களு​டைய திருவரு​ளையும் ​பெற்றார் இவ்வாறு சில காலம் திருப்பணி ​செய்து ​கொண்டிருந்து இ​றைவன் திருவ
டிநீர்​லெய்தினார்.

அபிராமிபட்டார்  

சோழவளநாட்டில் சரித்திரத்திலும் சாத்திரத்திலும் சமய நி​லையிலும்  விளக்கம்​பெற்ற திருக்கடவூரி​லே, அந்தணர் மரபி​லே அபிuராமிபட்டர் அவதரித்தார். இவரு​டைய முன்​னோர்கள் அபிராமி, அமுதக​டேசப் ​பெருமானிடத்து நீங்காத அன்பு பூண்டவர்கள் ஆதலால், இவருக்கும் அபிராமிபட்டர் என்​றே ​பெயர் சூட்டினார்கள். இவரும் தம் குல​தெய்வமாகிய ​தேவியினிடத்து முறுகிய அன்பு​கொண்டு தியான​யோகத்துத்  தி​ளைத்து வந்தார். பராகாச​வெளியில் பராசத்தி​யைச் ​செவ்​​​​வொளியாகக் கண்டு சிவானந்தத்​தேன் பருகித் தன்வசமற்றுத் தாய்வசமான ​சேயானார்.

இந்நி​லை, உலகியலில் ஊடாடும் ஊரினர்க்குத் ​தெரியுமா ? பாம்பறியும் பாம்பின்கால், சிற்றம்பலத் பித்​தேறிய மணிவாசகனா​ரைப் பித்த​தெனன்ற உலகந்தா​னே. ஆதலால் உடன் உ​றையும் அந்தணர்கள் பலரும் “சக்தியுபாசகர், ஊனும் கள்ளும் உண்டு திரியும் பித்தர்” , என்​றெல்லாம்  வாய்க்கு வந்தவாறு ​சொல்லித் திரிந்தனர். இந்த ஏச்சும் ​பேச்சும் சிவானந்தப் ​பெருவாரிதியி​லே தி​ளைக்கும் அவர் காதி​லே ஏறுமா? புலன் கடந்த ​வெளியி​லே ​பொருந்தியவருக்குப் புகழ் ஏது? இதழ் ஏது? எல்லாம் ஒன்றுதா​னே.

இவரு​டைய அருநி​லைக்காட்சி பார்க்குந் தி​சை​தோறும் திரிபு​ரையாள் திரு​மேனி​யைக் கண்டது. உ​மையும் உ​மை​யொருபாகருங் கூடிய உருவமாகக் கண்டது. இவ்வாறு அம்​மையும் அப்பனுமாகக் காணுங்காட்சி, சித்தாந்தச் ​செல்வராகிய அப்பர் ஐயாற்றிற்கண்டகாட்சியல்லவா? அக்காட்சி​யே இவர்க்கும் சித்திப்பதாயிற்று இவர் இவ்வாறு அம்​மையின் அருள்​வெள்ளத்து மூழ்கிவருங்காலத்து ஒருநாள் தஞ்​சை​யை ஆண்டசர​போசி மன்னன் ​தை அமாவா​சைக்குக் கடலாடக் காவிரிப்பூம்பட்டினம் வந்தான். கடவூர் நாத​ரைத் தரிசிக்க எண்ணித் திருக்​கோயிலிற்புகுந்தான். அம்​மையின் சந்நிதியில், சின்னஞ்சிறிய மருங்கினிற் சாத்திய ​செய்யபட்டும், ​பென்னம்​பெரிய மு​லையும், முத்தாரமும் பிச்சி​மொய்த்த கன்னங்கரிய குழலும், கண் மூன்றும் கருத்தில் ​வைத்துத் தன்னந்தனியிருந்து நி​னைவின்றியாண்டு ​கொண்ட எளிவந்த

கரு​ணைக்கு  வியந்து ஆனந்தத்​தேன் அருந்தி, அறிவு மயங்கி இருந்தார். அபிராமிபட்டர். அம்​மையின் அரு​​ளொளி அவர் ​மேனி முழுவதும் வீசிக்​கொண்டிருந்தது. வீறு​கொண்ட மன்னன் மனம் கனிந்து, க​ரைந்து இத்த​கைய ​​பெரியா​ரோடு அளவளாவ ​வேண்டும். இவர் உ​ரைகள்  யாவும் உய்திகாட்டும் மந்திரங்களல்லவா, என்று எண்ணினான். அருகிலிருந்த அந்தணர்க​ளை ​நோக்கி “​வேந்த​னையும் துரும்பாக எண்ணி வீற்றிருக்கும் இவ்விரதியார்  யார்?” , என்று வினாவினான். அற்றம் பார்த்திருந்த அந்தணர்கள் “வாமமார்க்கத்தவர், மதுமயக்கத்தால் மயங்கியிருக்கின்றார்”, என்றனர். மன்னன் இத​னை நம்பாது அவர் முகஓளி அகத்​தைப் பிணிக்க ஏதாவது ​பேச்சுப் ​பெறுதல் ​வேண்டும் என்றவிருப்பால்  “அய்யா இன்று என்னதிதி? எவ்வளவு நாழி​கை இருக்கிறது?”,  என்று ​கேட்டான். அபிராமி மதிமுகத்​தை மனத்தில் கண்டு, ஒளியில் ஆனந்தித்திருக்கின்ற பட்டரு​டைய காதில் அது அ​ரைகு​றையாகப்பட்டது. பட்டர் மனத்​தைப் பரத்தி​லே ​வைத்து “இன்று சுத்தபூர்ணி​மையாயிற்​றே” என்றார். ஒளிகண்ட அவர் மனம் பூர்ணி​மை​யையும், இருள்கண்ட அரசர் மனம் இரு​ளையு​மே கண்டிருப்பன. ஆதால் ​தேவியின் முகச்சந்திர​னைக் கண்டு  கூறிய அவர் வார்த்​தை​யை அவன் கண்டானா? அப்படியா, “அந்தணர்கள் ​சொன்னது உண்​மைதான்”. என்று எண்ணிச் ​​சென்றான்.

அரசன் ​செல்கின்றபவனி ஆரவாரத்தால் பட்டர் மனம் திரிபு​ரை​யோக நி​லையிலிருந்து  சிறுது பிரிந்தது. சிந்த​னை உலகிய​லை ​நோக்கிற்று. உண்​மை உணர்ந்தது, என்ன  ​சொல்லிவிட்​டோம் என்ற இரக்கம் எழுந்தது. அப்​போது அரசன், “ பட்ட​ரே, மயக்கமா?, இன்று பூர்ணி​மை இல்​லையாயின், அரசன் ஆ​ணை உம்​மை நன்​னெறிப்படுத்த வருத்தும், அறிக”, என்று சினந்து ​சென்றான். பட்டர் இனி என்​செய்வது? “ எல்லாம் அவள் ​செயல் எண்ணி “உதிக்கின்ற” என்று ​தொடங்கி அம்​மை​யைத் ​தோத்திரிக்க ஆரம்பித்தார். அம்​மை​யோ ​செந்தமிழ்வழிந்​​தொழுகும்  திருச்​செவியள். ஆதலால், தமிழ் விருப்புக் கரு​ணை​யைத் தாமதிக்கச் ​செய்தது. பாட்டும் எழுபத்​தெட்டாயிற்று, காலமும் மா​லைaயாயிற்று. உலகம் இருண்டு வருகிறது. பரபரத்த பட்டர் மனத்தில் ​தெளிநின்ற ஞானத்திரு பிறந்தது. அதனால் எழுந்த எழுபத்​தொன்பதாம் பாடல் “விழிக்​கே அருளுண்டு” என்பது. இப்பாடல் ​கேட்ட ​தேவி தனது ​தோட்டி​னைக் கழற்றி வான மண்டலத்து வீசி நில​வொளி உண்டாக்கி ​யோக நித்தி​ரையில் இருக்கும் பட்ட​ரை எழுப்பி, “பார், சுத்த பூர்ணி​மை” என்றாள். பட்டர் கண்டு அம்​மையின் கரு​ணைத் திறத்​தை வியந்து நின்றார். அம்​மை “அன்ப​னே. கு​றை​யையும் நி​றைவித்து முதலும் க​டையும் கூட்டிமுடித்து இப்பாமா​லை​யை எமக்குத் சூட்டுக” என்று ஆ​ணை தந்தாள். பட்டர் ஆ​ணைவழி நின்று அபிராமி அந்தாதி​யைப் பாடி முடித்தார்.

அரசன் மதி​யொளி கண்ட அடியார் ​பெரு​மை​யை அறியாத தம்மதியிருள் நீங்கிப் பட்ட​ரை அவமதித்த தம்மதியீனத்திற்கு வருந்தி, ஓடி வந்து திருவடிகளில் வீழ்ந்து வணங்கி மன்னிப்பு ​வேண்டினான். காணிக்​கையாகக் காணி​கைக்​கொள்ள ​வேண்டினான். ​செம்​பொருள் விரும்பிய பட்டர் “நிலம் புலத்​தை அழிக்கும், ​பொருள் மரு​ளை அளிக்கும், ​வேண்டாம்”, என்று மறுத்தார் அரசன் தங்கள் சந்ததிக்காவது ஏதாவது ஏற்றுக்​கொள்ள ​வேண்டும் என்று கு​றையிரந்தான் பட்டர் விருப்பப்படி ​வேலிக்குக் குறுணி களமான்யமாகச் சூரிய சந்திரர் உள்ளவ​ரை எல்​லோரும் ​கொடுத்துவர ஆ​ணை தந்து தஞ்​சை ​சென்றான். இதற்குரிய உரி​மைச் ​செப்புப் பட்டயம் ஒன்று பட்டர் சந்ததியாரிடம் இன்றும் இருக்கிறது.

இவர் ​செய்த ​வேறு நூல்கள் : திருக்கடவூர்த் தல விநாயகரான கள்ளவாரணப்பிள்​ளையார் பதிகம், அபிராமி பதிகம், அமுதக​டேசர் பதிகம் ஆகிய இ​வைகளும் இவரியற்றின​வே. அன்றியும், இவர் சந்ததியார்கள் காலசம்மாரப்பின் முடுகு ​வெண்பா என்ற நூ​லையும் இவர் இயற்றியதாகக் கூறுகிறார்கள். இரண்​டொரு பாடலும் ​சொல்லுகின்றார்கள். அவற்​றை ஆராய்ந்த ​போது தருமபுர ஆதின வித்துவானாக விளங்கிய இராதாநல்லூர்ச் ​சைவ எல்லப்பநாவலர் ஏட்டுப்பிரதி ஒன்றன் இறுதியின் “அபிராமி பட்டர் ​செய்தருளிய காலசம்மாரப்பின் முடுகு ​வெண்பா முடிந்தது”  என்ற குறிப்புக் காணப்பெற்றது. ஆனால் அந்த ஏடு நி​றைவு ​பெறாது உதிர்ந்த பல ஏடுக​ளைக் ​கோர்த்ததாகவும் இருந்தது. அதிலிருந்து ஒன்பது பாடல்க​ளே கி​டைத்தன. ஆனால், அந்நூல் முப்பது பாடல்கள் உ​டைய​தென்று ​தெரிகிறது.

காரிநாயனார்

திருக்கடவூரில் அவதரித்தவர். ​சொல் விளங்கிப் ​பொருள் ம​றைந்து கிடக்கும்படித் தம் ​பெயரினால் ​கோ​வைபாடி மூ​வேந்தரிடத்துஞ் ​சென்று அவர்கள் மதிழும்படிப் ​பொருள் விரித்து​ரைத்து, அவர்களிடம் மிகுந்த ​பொருள்க​ளைப் ​பெற்றுச் சிவாலயங்கள் கட்டுவித்தும், சிவனடியார்களுக்கு ​வேண்டும் ​​பொருள்கள் அளித்தும் முத்தி எய்தினார்.

திருக்கடவூர் உய்யவந்த​தேவநாயனார்

திருவியலூர் உய்யவந்த​தேவ நாயனார்க்குச் சீடர் திருவியலூர் ஆளு​டைய​தேவ நாயனார். அவருக்குச் சீடர் திருக்கடவூர் உய்யவந்த​தேவ நாயனார்,  வடநாட்டிலிருந்து ​தென்னாட்டுத் தலயாத்தி​ரைக்கு வந்து திருவியலூரில் தங்கிய காலத்தில் அவ்வூர் ஆளு​டைய​தேவ நாயனாருக்காக, திருவுந்தியார் என்னும் ஞானநூ​லைச் ​செய்தருளினார் என்பது பழஞ்​செய்தி. அவர் வடநாட்டவர் ஆயின் தமிழில் உள்ள ​பெயர் பின் வந்தது எனல் ​வேண்டும். அவரது இயற்​பெயர் முதலியன ​தெரியவில்​லை “உய்யவந்த”  என்றது பற்றிப் பு​னைந்ததுமாம்.

திருக்கடவூர் உய்யவந்த ​தேவ நாயனார் தாம் அருளிச் ​செய்த ஞானநூ​லைத் தில்​லைவார் அந்தணர்கள் மறாமல் ஏற்கத் தில்​லைமன்றத்துத் திரு​வைத்​தெழுத்துப் படியின் கீழ்​வைத்தலும், அதிலிருந்து யா​னைவடிவம் உயிர்த்துத் தன்​கையால் எடுத்து, மன்றாடி மலர்த்தாளின் கீழ் ​வைத்தது. அதனால் திருக்களிற்றுப் படியார் என்ற சிறப்புற்று. (காலம் சகம் 1100 – கி.பி. 1177)  திருவியலூர் உய்யவந்த ​தேவ நாயனார் அருளிய திருவுந்தியார் நூலி​னையும் திருக்கடவூர்  உய்யவந்த ​தேவ நாயனார் அருளிய திருக்களிற்றுப்படியார். நூ​லையும் இயற்றியவர் ஒருவ​ரே அல்லது குருசிஷ்யப் பரம்ப​ரையினராகலாம். (ஆதாரம் கி.க.பாடல்.96)

 

Quartz crystals have been in regular rolex replica use for many years to give an accurate frequency for all radio transmitters, radio receivers and computers. Their accuracy comes from an amazing set of coincidences: Quartz -- which is silicon dioxide like most breitling replica sand -- is unaffected by most solvents and remains crystalline to hundreds of degrees Fahrenheit. The property that makes it an electronic miracle is the fact that, when compressed or bent, it generates a charge or voltage on its surface. This is a fairly common swiss replica watches phenomenon called the Piezoelectric effect. In the same way, if a voltage is applied, quartz will bend or change its shape very slightly. If a bell were shaped by grinding a single crystal of quartz, it would ring for minutes after being tapped. Almost no energy is lost omega replica in the material. A quartz bell -- if shaped in the right direction to the crystalline axis -- will have an oscillating voltage hublot replica on its surface, and the rate of oscillation is unaffected by temperature. If the surface cartier replica voltage on the crystal is picked off with plated electrodes and amplified by a transistor or integrated omega replica circuit, it can be re-applied to the bell to keep it ringing.